நீட் தேர்வை எழுத வயது உச்ச வரம்பை நீக்கியுள்ளது மருத்துவ ஆணையம்

130
Advertisement

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை எழுத வயது உச்ச வரம்பை நீக்கியுள்ளது மருத்துவ ஆணையம்.

நீட் தேர்வுக்கு வயது உச்சவரம்பு குறித்து தேசிய தேர்வு முகமைக்கு மருத்துவ ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், நீட் தேர்வுக்கு வயது உச்சவரம்பு என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பாணையை அதற்கேற்ற வகையில் வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு, தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நீட் தேர்வுக்கு வயது வரம்பு எதுவும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் குறிப்பிடாத நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.

Advertisement