பழத்தில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களின் அர்த்தம்! இந்த CODE இருந்தா ஆபத்து..வாங்காதீங்க..

173
Advertisement

பழங்கள் உடல்நலத்திற்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், நாம் வாங்கி உட்கொள்ளும் பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கிறதா என்பது கேள்விக்குறியே. சூப்பர்மார்கெட் போன்ற இடங்களில் வாங்கும் பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். ஸ்டிக்கர் ஒட்டியதெல்லாம் தரமான பழம் என நம்பி பலரும் ஏமாறுகின்றனர்.

இந்த ஸ்டிக்கர்கள் உணர்த்தும் உன்மையை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பழத்தின் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் உள்ள codeக்கு PLU, அதாவது Price Lookup Number என பொருள். நான்கு இலக்கத்தில் இருக்கும் மூன்று அல்லது நான்கு எனத் தொடங்கும் code இருந்தால், அந்த பழம் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டதாகும்.

ஐந்து இலக்கத்தில் எட்டு என தொடங்கும் code கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தால் அந்த பழம் மரபணு ரீதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து இலக்கத்தில் ஒன்பது என தொடங்கும் code இருந்தால் அது organic முறையில் தயாரான மற்ற இரண்டு codeகளை விட பாதுகாப்பானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  International Federation for Produce Standards என்ற சர்வதேச உணவு அமைப்பினால் இது போன்ற தகவல்களை வெளியிடும் முறை சாத்தியமானது குறிப்பிடத்தக்கது.