இஸ்ரேல் சிறையில், 86 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய பாலஸ்தீனிய ஆயுதக்குழு தலைவர் உயிரிழந்தார்…

162
Advertisement

ஜெருசலேம், இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

பாலஸ்தீனம், காசா முனை மற்றும் மேற்குகரை என இரு பகுதிகளாக உள்ள நிலையில், காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. மேற்குகரை பகுதியை பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆட்சி செய்து வருகிறார். மேற்குகரை மற்றும் காசா முனையில் ஆயுதம் ஏந்திய சில குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள், இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், 86 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனிய ஆயுதக்குழு தலைவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.