மத்திய அரசின் திட்டங்கள் அமலாவதை கண்காணிக்கும் “திஷா கமிட்டி”-யின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, மத்திய அரசின் திட்டங்கள், மாவட்டங்களில் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘திஷா கமிட்டி அமைக்கப்பட்டது.
முதலமைச்சரை தலைவராக கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு எனும் திஷா கமிட்டியில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் துணைத்தலைவராகவும், அதன் செயலாளர் உறுப்பினர் செயலாளராகவும் உள்ளனர்.
மேலும் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தொல்.திருமாவளவன், திருநாவுக்கரசர், ரவீந்திரநாத்குமார் உள்ளிட்ட 9 பேரும், மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், எழிலன், நீலமேகம், செங்கோட்டையன் உள்ளிட்ட 6 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த “திஷா கமிட்டி”-யின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.