கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குச்சாவடி விவரங்களை வாக்காளர்கள் அறிந்துகொள்ள 3 வழிமுறைகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது…

98
Advertisement

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் தாங்கள் எந்த வாக்குச்சாவடியில் சென்று வாக்களிப்பது?

வாக்குச்சாவடியில் எவ்வளவு கூட்டம் உள்ளது? வாகன நிறுத்த வசதி எங்கு உள்ளது? வீல் சேரை முன்பதிவு செய்வது? வேட்பாளர்கள் விவரம்? உள்ளிட்ட விவரங்களை 3 வழிகளில் பெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, செல்போன் செயலி, இணையதளம், இலவச எண் மூலம் அறிந்துகொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. சுனாவனா செயலி, ஜி.பி.எஸ் மற்றும் www.kgis.ksrsac.in என்ற இணையதளம் மூலம் வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.