புதுக்கோட்டை அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…

22
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் நவநீத கிருஷ்ணன் என்பவர்,

இன்று கல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மாடு முட்டியதில் உயிருக்கு போராடிய அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்நிலையில், நவநீதகிருஷ்ணனுடைய உடலை பெற குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களுடன் அறந்தாங்கி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மஞ்சுவிரட்டு நடத்திய விழா கமிட்டியாளர்கள் மீது வழக்கு, பாதுகாபு உபகரணங்கள், இறந்த காவலருக்கு உரிய நிவாரணம் ஆகிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.