திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று பெரியவர்கள் கூறுவார்கள்,
அதற்குக் காரணம் அதில் பல்வேறு விதமான பாரம்பரியங்கள் இருக்கிறது, இந்தியாவில் திருமணம் என்பது பல சாங்கியம், சடங்குகள் நிறைந்தது. திருமணம் நாள் குறிப்பது முதல் தாளி கட்டும் வரை எல்லாவற்றிலும் நல்ல நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுவது நல்ல முகூர்த்த நேரம். மணமகளின் கழுத்தில் நல்ல நேரத்திற்குள் தாலி கட்டுவது பாரம்பரியம், அப்படி ட்ராபிக்கில் மாட்டிக்கொண்ட மணப்பெண் ஒருவர் நல்ல நேரம் முடிவதற்குள் மண்டபத்திற்கு செல்ல வேண்டும் என்று, மெட்ரோ ரயில் பிடித்து ஸ்டேஷனில் செல்லும் காட்சி வைரலாகியுள்ளது
பெங்களூர் நகரம் மிகவும் ட்ராபிக் அதிகமாக இருக்கும், அதில் மாட்டிக் கொண்டால் சில கிலோமீட்டர்கள் கடக்கவே பல பணிநேரம் ஆகும், எனவே கார் நெரிசலில் மாட்டிக்கொண்ட மணப்பெண் சாமர்த்தியமாக அருகில் இருந்த மெட்ரோ நிலையம் சென்று ரயில் பிடித்து தன்னுடைய திருமணத்திற்க்கு, முகூர்த்த நேரம் முடிவதற்குள் சென்றுவிட்டார். எனவே பெண்ணின் சாமர்த்தியதனத்தைப் பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.