மணமகளை நினைத்து பரிதாபப்படும் நெட்டிசன்கள்

25
Advertisement

சமீபநாட்களாக  திருமணங்களில் நடந்த வினோத நிகழ்வுகள் ,வித்யாசமாக நடந்த திருமணங்கள் போன்ற வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இந்த வரிசையில், தற்போது வைரலாகி  வரும் இந்த வீடியோவில் மணமகளை விட  மிக உயரமாக இருக்கிறார்  மணமகன். திருமணத்தன்று, மணமக்கள் இருவரும் மாலையை  மாற்றிக்கொள்ள வேண்டும்.மணமகனின் மார்பு வரையான அளவு  கூட இல்லாத மணமகள்,மணமகனின் கழுத்தில் மாலையை போட குதித்தபடி முயற்சிக்கிறார்.

ஒருகட்டத்தில் மாலையை தூக்கி வீசி ஒருவழியாக போட்டுவிடுகிறார்.பின் மணமகன் மணமகளின் கழுத்தில் மாலை போடுகிறார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர்  அதேவேளையில் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement