தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு

342

அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மதுஅருந்திவிட்டு பேருந்தை இயக்கினால், பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

அரசுப் பேருந்து ஓட்டுனநர்கள் மதுஅருந்திவிட்டு வாகனங்கள் இயக்குவதாக புகார் எழுந்துள்ளதால், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்திவிட்டு அரசுப் பேருந்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

ஓட்டுநர், நடத்துனர்கள் மது அருந்திவிட்டு பணியாற்றினால், பயணிகள் நம்பிக்கை குறைந்து அரசுப்பேருந்தில் பயணிப்பதை தவிர்க்க வாய்ப்பு உள்ளது என்றும் விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மது அருந்திவிட்டு பேருந்துகளை இயக்குவது சட்டப்படி குற்றமாகும் என்றும், ஓடடுநர்கள், நடத்துனர்கள் மது அருந்திய நிலையில் பணியாற்றுவது கண்டறியப்பட்டால், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.