19 எம்.பி-க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கை கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும், இது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு பலமுறை தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார். எனினும், விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததாக அவர் குற்றம் சாட்டினார். அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் அமைதி காக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய போதும், அவர்கள் அவையை நடத்த விடாமல் தொடர் அமளியில் ஈடுபட்டதால், எம்.பி-க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார். இந்த முடிவு கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்