பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை இன்றைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்

273

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை இன்றைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளில் உள்ள 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 இடங்களுக்கு, இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிக்க கடந்த நான்கு ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் அளிக்கப்பட்டிருந்த 2 நாள் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை இன்றைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது