Tuesday, July 15, 2025

ஜிம்முக்கு போனா கூடவே வரும் சரும நோய்கள்! தவிர்ப்பது எப்படி?

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டி புது வருடம் தொடங்கியவுடன் பலரும் ஜிம்மை நோக்கி படையெடுப்பது வழக்கம்.

அப்படி புதிதாக ஜிம் செல்பவர்களுக்கு சில சரும நோய்கள் தாக்கும் வாய்ப்புள்ளது. அதை எப்படி தவிர்ப்பது என்பதை இத்தொகுப்பில் பார்ப்போம்.

தோல் தடித்து, வட்டமாக சிகப்பான எரிச்சல் ஏற்படுகிறது என்றால் படர்தாமரை தொற்று தாக்கியுள்ளதென புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக நோயை இன்னும் தீவிரப்படுத்தும் ஸ்டெராய்டு அடங்கிய மருந்தை மெடிக்கல் கடைகளில் வாங்கி பயன்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். 

Athletes Foot என்னும் பூஞ்சை தொற்று ஏற்பட்டால் கால் விரல்களுக்கு நடுவே அரிப்பு ஏற்பட்டு தோல் உரிதல் நிகழும். நன்கு வியர்வையை உரியும் சாக்ஸ் அணிவது மற்றும் அவற்றை முறையாக சுத்தப்படுத்துவது தீர்வாக அமையும். Follicullitis எனப்படும் முகப்பருக்கள் போலவே சிகப்பு நிறத்தில் எரிச்சலான உணர்வை உண்டாக்கும் நோயை தவிர்க்க இறுக்கமான ஆடை அணிந்து உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

கால் ஆணிகள் உள்ள நபர் நடந்த அதே இடத்தில் நடக்கையில் எளிதாக அவை ஏற்படும். அப்படி பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். Staphylococcal skin infections என்ற பஸ் வழியும் சிகப்பு நிற கட்டிகள் காய்ச்சல், உடற் சோர்வு என உடல்நலனை வெகுவாக பாதிக்கும் தன்மை கொண்டது.

மேற்குறிப்பிட்ட அனைத்து சரும நோய்களும், பிறரின் வியர்வை மற்றும் பலரும் ஒரே உபகரணங்களை பயன்படுத்துவதால் பரவுகின்றன. இதை தவிர்க்க  ஜிம் உபகரணங்களை கிருமிநாசினி கொண்டு தூய்மைபடுத்தி பின் உபயோகிக்க வேண்டும்.

காயங்கள் இருந்தால் band-aid கொண்டு மூட வேண்டும் மற்றும் workout செய்யும் போது shoes அணிவது அவசியம்.  மேலும், workout செய்து முடித்தவுடன் குளிப்பதை கட்டாயமாக பின்பற்றினால் இது போன்ற சரும தொற்றுக்களை தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news