மந்திர சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் இறப்பதற்கு முன்னர் கடைசியாக எடுத்த போட்டோவை அவரது நெருங்கிய நண்பர் டாம் ஹால் தற்போது இன்ஸ்டாவில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட போட்டோவில் , தொப்பி அணிந்த ஷேன் வார்னே வாய்நிறைய சிரிப்போடு போஸ் கொடுத்துள்ளார் .
52 வயதான வார்னே , தாய்லாந்தில் விடுமுறைக்கு சென்றிருந்தபோது தனது ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார். அவரது மேலாளர் ஜேம்ஸ் எர்ஸ்கின், ஷேன் வார்ன் ‘ஏடாகூடமான உணவு முறைகளில்’ ஈடுபடுவார் என்று சொல்லியதோடு வார்ன் கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு வெறும் திரவ உணவுகளையே உட்கொண்டதாகவும் தெரிவித்தார்.வார்னேவின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவரது மரணம் இயற்கை மரணமே என்று தெரிவிக்கப்பட்டது.