தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பள்ளிக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களில் சிலருக்கு காய்ச்சல் இருந்த நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், 19 மாணவர்களுக்கும், பெற்றோர்களில் 9 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.