Samsung Galaxy F54 5G ஜூன் 6 இந்தியாவில் வெளியீடு! முக்கிய விவரங்கள் அறிவிப்பு!

95
Advertisement

இந்தியாவில் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருக்கும் Samsung மிட் ரெஞ்சு செக்மென்ட்டில் அதன் புதிய F54 5G ஸ்மார்ட்போனை ஜூன் 6 ஆம் தேதி வெளியிடவுள்ளது. இதன் முன்பதிவு மே 30 தொடங்கிவிட்டது.

இந்த ஸ்மார்ட்போன் பற்றிய மேலும் சில விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

இதில் ஒரு 6.7 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி O டிஸ்பிளே, 120HZ Refresh Rate, Exynos 1380 Processor வசதி, 6000mAh பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங் இடம்பெறும். இப்போதெல்லாம் சாம்சங் போன் உடன் சார்ஜ்ர் இடம்பெறுவது இல்லை என்பதால் இந்த போன் உடன் சார்ஜ்ர் இடம்பெறுமா என்பது தெரியவில்லை.

முக்கியமான வசதியாக இதில் மிட் ரெஞ்சு போன்களில் சிறந்த 108MP முக்கிய OIS கேமரா வசதி, பிரீமியம் Galaxy S23 சீரீஸ் போன்களில் இடம்பெறும் Astrolapse வசதி, இரவு நேரத்திலும் சிறந்த செல்பி கேமரா, Fun Mode, Nightography வசதி, Monster Shot 2.0 போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த போனை நாம் மே 30 முதல் Flipkart மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்காக 999 ரூபாய் முன்பதிவு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை முன்பதிவு செய்பவர்களுக்கு 2,000 ஆயிரம் ரூபாய் சலுகை கிடைக்கும்.