திருச்சி சந்துகடை பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் நகை பட்டறை கடை நடத்தி வருகிறார்.
குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த ஜோசப் திரும்பி வந்து பார்த்தபோது, கடையில் இருந்த 950 கிராம் தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து, ஜோசப் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி, கருவாட்டுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரணிகுமார், சரவணன் ஆகிய இருவரையும் 4 மணி நேரத்தில் கைது செய்தனர். பரணிகுமார் வீட்டிலிருந்த நகைகளையும் மீட்டனர் இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை நேரில் சந்தித்து மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா பாராட்டு தெரிவிதார்.