“பரமா..மரண பயத்தை காமிச்சுட்டான் பரமா…”அந்தரத்தில் தலைகீழாக தொங்கிய மக்கள்

231
Advertisement

வாரம் 6 நாளும் மாங்கு மாங்குனு உழைக்கிறோம்.ஒரு நாள் ரெஸ்ட் எடுக்கிறோம் அதும் பொறுக்காம வீட்டுல இருக்க குட்டிஸ் ஜோலியா அவுட்டிங் போகலாம்னு ஸ்டார்ட் பண்ணுவாங்க.

இறுதியா அது,ஒரு தீம் பார்க்கில் வந்து நிற்கும்.என்னதான்  வீட்ல ரெஸ்ட் எடுத்தாலும் குழந்தைகளுக்காக அந்த ஒரு நாளில் வெளியே நேரத்தை கழிப்பதும் ஒரு வரம்  தான்.அதே வேளையில் எங்கு போனாலும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.

அதுபோன்று, சில பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்ட நிலையில் கேளிக்கை இடங்களில் ஏற்பட்ட விபத்துகளை பார்த்துருப்போம்.தற்போது மீண்டும் அது  போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் மேற்கு பென்சில்வேனியாவில், கென்னிவுட் கேளிக்கை பூங்காவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பூங்காவில் உள்ள  ” 360 ரைடு” எனப்படும் ஒருவகை சவாரி உள்ளது. கடந்த திங்கள்கிழமை இந்த சவாரி செய்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இதை மறக்கமாட்டார்கள்.

சம்பவத்தன்று,மக்கள் உற்சாகமாக தங்கள் குழந்தைகளுடன் இந்த சவாரி செய்ய இருக்கைகளில் உட்காந்தனர்.அனைவரும் உட்காந்தபின் சவாரியும் தொடங்கிறது.நன்றாக தொடங்கிய இந்த சவாரி சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நின்றது.

அதாவது மக்கள் அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி இருக்கின்றனர்.அந்நேரம் இன்ஜின் பழுதாகி நின்றதாக சொல்லப்படுகிறது.இதை அங்குள்ள  மக்கள் தங்கள் போன்களில் வீடியோ எடுத்து சமூக வளைத்தையில் பகிர்ந்துவருகின்றனர்.

தகவலின்படி,சில நிமிடம் மக்கள் தலைகீழாக அந்திரத்தில் தொங்கியபடி இருந்துள்ளனர்.சற்று நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு,சவாரி செய்த மக்கள் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டதாக கேளிக்கை பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இந்த விபத்திற்கான காரணம்  கண்டறியும் வரை இந்த சவாரி நிறுத்துவைக்கப்படுவதாக தெரிவித்து உள்ளது.அதிர்ஷ்டவசமாக  யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும்.எதிர்பாராதவிதம் நடந்த இந்த சம்பவத்தால் அந்திரத்தில் தலைகீழாக தொங்கியவர்கள் இதை மறக்க சில காலம் எடுத்தும் என இந்த வீடியோவை பார்க்கும் இணையவாசிகள் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.