உலகெங்கும், 20 ஆயிரம் லட்சம் கோடி எறும்புகள் உள்ளதாகவும், அவற்றின் மொத்த எடை 1,200 கோடி கிலோ என்றும் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட, பெயர் வைக்கப்பட்ட 15 ஆயிரத்து 700 வகை எறும்புகள் உள்ளன என்றும் இவை தவிர, பெயரிடப்படாத பல எறும்பு வகைககளும் உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.489 ஆய்வுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகெங்கும் 20 ஆயிரம் லட்சம் கோடி எறும்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த எறும்புகளின் மொத்த எடை, ஆயிரத்து 200 கோடி கிலோவாகும் என்றும் இது உலகெங்கும் உள்ள வனங்களில் வசிக்கும் பறவைகள், பாலுாட்டிகளின் எடையைவிட அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனிதர்களின் மொத்த எடையில் 20 சதவீதம் அளவுக்கு எறும்புகளின் மொத்த எடை உள்ளது.
நகரமயமாக்கல், ரசாயனங்களின் பயன்பாடு, பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால், பல பூச்சியினங்கள் அழிந்து வருகின்றன என்றும் மனிதன் தன்னுடைய சொந்த நலனை பாதுகாக்க நினைத்தால், எறும்பு உள்ளிட்ட பூச்சியினங்கள் உள்ளிட்டவற்றை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.