ஆதார் எண் இருந்தால் போதும் ரேஷன் வாங்கலாம் … மத்திய அரசு அறிவிப்பு

463
Advertisement

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி பியூஷ் கோயல் பேசி போது, ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 77 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் . புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அரசின் சலுகைகளைப் பெறுவதில் சந்திக்கும் பிரச்சினைகளைக் களைய , தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி பிரதமர் நரேந்திர மோடியால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த வசதியின் மூலம், புலம்பெயர்ந்த பயனாளி ஒருவர் அவர் பணிபுரியும் இடத்தில் ரேஷன் பெற முடியும்,
இதனால் யாரும் பட்டினி கிடக்காத நிலை உருவாக்கப்பட்டது.

புலம்பெயரும் தொழிலாளர்கள் வேறு ஊர்களுக்கு செல்லும்போது, ரேஷன் பொருட்கள் வாங்க புதிய ரேஷன் கார்டு பெற வேண்டியதில்லை .ஏற்கனவே உள்ள தங்களது ரேஷன் கார்டின் எண்ணையோ அல்லது ஆதார் எண்ணையோ எந்த ரேஷன் கடையிலும் தெரிவித்து, பயோமெட்ரிக் மூலம் அடையாளத்தை உறுதி செய்து கொண்டு, பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம். தொழில்நுட்பம் அடிப்படையிலான ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தால் இது சாத்தியம் ஆகியுள்ளது என்று பேசினார் .