திமுக மாநிலங்களவை எம்பி. என். ஆர் இளங்கோவனின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்தார்

63
Advertisement

திமுக மாநிலங்களவை எம்பி. என். ஆர் இளங்கோவனின் மகன் ராகேஷ் புதுச்சேரியில் இருந்து கார் மூலம் சென்னை திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அவர் வந்து கொண்டிருந்த கார் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராகேஷ் உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது நண்பர் வேதவியாஸ் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்