கேமராவில் பதிவான “விசித்திரமான உருவம்”

311
Advertisement

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள உயிரியல் பூங்கா அருகில் விசித்திரமான உருவம் ஒன்று கேமராவில் பதிவாகி உள்ளது.

டெக்சாஸ், அமரில்லோ நகரத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தால் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.பார்ப்பதற்கு நீண்ட முடி மற்றும் இடது கையிலிருந்து வெளிப்புறமாக நீட்டிய நகங்களைக் கொண்ட ஒரு மானுடையே உருவம் போல உள்ளது.

மேலும் இது குறித்து, “அமரில்லோ உயிரியல் பூங்காவின் வெளிப்புறத்தில் , மே 21 ஆம் தேதி அதிகாலை 1:25 மணியளவில் இந்த உருவம் கேமராவில் பதிவாகி உள்ளது.விசித்திரமான தொப்பி அணிந்து இரவில் இதுபோன்று யாராவது நடக்க விரும்புவார்களா ? பார்ப்பதற்கே விசித்திரமாக இருக்கும் இது என என்று உங்களுக்கு ஏதேனும் யோசனைகள் உள்ளதா?” என இந்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.