பிரதமர் மோடி பி ஜே பி 4 மாநிலங்களில் வெற்றி பெற்றதை பற்றி நேற்று கட்சியினரிடையே பேசிய போது, ஏழை மக்கள் பாஜக மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான்கு மாநில தேர்தல் தீர்ப்பே எடுத்துகாட்டுகிறது. நடைபெற்று முடிந்த மாநிலங்களின் தேர்தல் வெற்றி, வரலாற்று சாதனையாகும் . 2022 தேர்தல் முடிவுகள், 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என கூறினார்.
பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக பரசாந்த் கிஷோர் தனது ட்விட்டில் “இந்தியாவுக்கான யுத்தம் 2024-ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தான் இருக்கிறதே தவிர, மாநிலத் தேர்தலில் இல்லை. இது பிரதமர் மோடிக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் புத்திசாலித்தனமாக இந்த தேர்தலை, அந்த தேர்தலுடன் ஒப்பிட்டுப் பேசிஇருக்கிறார் .இந்த தவறான கருத்துக்கு உடன்பட்டு விடாதீர்கள்’’ என பதிவிட்டுள்ளார்.இவர் யாருக்கு இந்த அறிவுரையை யாருக்காக சொல்லியிருக்கிறார் என்பது தான் அரசியல் பார்வையாளர்களின் கேள்வியாக உள்ளது .