வீடற்ற சிறுவனுக்கு பாடம் சொல்லித்தரும் காவலர்

376
Advertisement

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு படிப்பு மிக அவசியமான ஒன்று.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு  கல்வி கிடைப்பதை  உறுதி செய்வது அவர்களின் கடமை.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த குழந்தைகள் , அடித்தட்டு மக்களாக இருந்தாலும் தங்கள் கல்வியை உறுதியாய் பிடித்து வாழ்வில் முன்னேறிவதை நம்மால் பார்க்கமுடியும்.

இதனை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் ,இணையத்தில் புகைப்படம் ஒன்று உலாவருகிறது.இதில் ஸ்வாரஸ்யம் என்னவென்றால் போக்குவரத்துக்கு காவலர் ஒருவர்,சாலைஓரம் வீடின்றி வாழும்  8 வயது சிறுவனுக்கு பாடம் சொல்லித்தருகிறார்.

கொல்கத்தா காவல்துறையால் பேஸ்புக்கில் பகிரப்பட்ட பதிவில்,

கொல்கத்தா பாலிகங்கே ஐடிஐ அருகே உள்ள சாலையில் போக்குவரத்து காவலராக பணியாற்றுபவர்  சார்ஜென்ட் பிரகாஷ் கோஷ் ,அவருக்கு அருகிலுள்ள சாலைகளில் விளையாடிக்கொண்டிருக்கும் சுமார் எட்டு வயது சிறுவனை நாட்களாக கவனித்து வந்தார்.

https://www.facebook.com/kolkatapoliceforce/photos/a.290077441425942/1429010310865977

சிறுவனின் தாய் சாலையோர உணவுக் கடையில் வேலை செய்கிறார், மேலும் தனது மகனுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது மகனை அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்காக மிகவும் சிரமப்பட்டார். வீடற்ற தாயும் மகனும் நடைபாதையில் வாழ்கிறார்கள், ஆனால் தனது மகன் வறுமையின் தடைகளை உடைத்து உலகில் தனது முத்திரையை பதிப்பார் என்ற பெரும் நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டுவருகிறார்.

இருப்பினும் , 3 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகன் படிப்பில் ஆர்வத்தை இழக்கிறார், இது அந்த தாயின்  மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாக மாறியது.

ஒருகட்டத்தில் , சார்ஜென்ட் கோஷை சந்தித்தபோது தன் மகன் குறித்த கவலைகளை அவரிடம் பகிர்ந்துகொண்டார். சிறுவனின் நிலையை அறிந்த அவர்,  தன்னால் முடிந்த உதவியை செய்வதாக உறுதியளித்தார்.

நாட்கள் கடந்து செல்ல ,  சார்ஜென்ட் பிரகாஷ் கோஷ் அந்த சிறுவனுக்கு பாடம்சொல்லித்தர தொடங்கினார்.சிறுவனை அவர் பணியில் உள்ள சாலையில் மரத்தின் நிழலில் அமரவைத்து , வீட்டு  பாடங்களை சொல்லித்தருவது , மற்றும் சரிபார்ப்பது முதல்,  எழுத்துப்பிழை, உச்சரிப்பு, கையெழுத்து ஆகியவற்றை சரிசெய்வது வரை , பணிக்கு வரும்போதும் ,பணிமுடிந்த பின்பும்  அந்த சிறுவனை கவனித்துக்கொள்கிறார்.

தன் பணியும் பாதிக்காமல் , சிறுவனுக்கு பாடமும் சொல்லித்தரும்  அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.கொல்கத்தா காவல்துறையால்  பகிரப்பட்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.