பதுக்கி வைத்திருந்த 3டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார்

275

பெண்ணாடம் அருகே, அரசு அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த எடையூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் ராமச்சந்திரன் என்பவரின் வீட்டை ஆய்வு மேற்கொண்டபோது 3டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  மேலும், போலீசார் 3டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.