ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் அமைத்த 5 பேர் கொண்ட விசாரணைக் குழு சிக்னல் பிரச்சனை தான் காரணம் என்று கூறிய நிலையில்,
அதில் ஒருவர் மட்டும் விபத்துக்கான காரணம் குறித்து மாற்றுக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதனால் விசாரணை குழு கருத்துவேறுபாடு நிலவுவது அப்பட்டமாக தெரிகிறது. ஓடிசாவில் நடந்த பெரும் ரயில் விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளில் அடுத்தடுத்து என்ன நடந்தது என்பதை மறைக்க முயற்சிகள் நடக்கிறதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பஹாநாகா பஜார் ரயில் நிலையத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. அந்த நேரத்தில் அங்கு வந்த பெங்களுருவில் ஹவுரா நோக்கி வந்த ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1000 படுகாயம் அடைந்தனர்.