குஜராத்தில் 29 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

222

குஜராத்தில் 29 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சூரத் நகரில் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிபபிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பாவ்நகரில் 5 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கும்பிரதமர், பின்னர் ஜிஎம்டிசி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார்.

அதனைத் தொடர்ந்து நாளை காலை காந்திநகர்-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை காந்தி நகர் ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ரயிலில் கலுபூர் ரயில் நிலையம் வரை பிரதமர் மோடி பயணிக்கிறார். அங்கு அகமாதாபத் மெட்ரோ ரயில் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.