“எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு நாட்டுக்கு எதிரானதாக மாறிவிடக்கூடாது” – பிரமதர் மோடி

219
Advertisement

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு நாட்டுக்கு எதிரானதாக மாறிவிடக்கூடாது என பிரமதர் மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சி பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹர்மோகன் சிங் யாதவின் 10ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது, ‘எமர்ஜென்சி’ காலத்தில் நாட்டின் ஜனநாயகம் நசுக்கப்பட்டபோது, அரசியல் சாசனத்தை காப்பாற்ற நடைபெற்ற போராட்டத்தில், ஹர்மோகன் சிங் யாதவுக்கு முக்கிய பங்கு உள்ளதாக குறிப்பிட்டார்.

சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் சம வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்றும், அடிப்படை வசதிகளை யாரும் பறிக்கக் கூடாது என்பதே சமூக நீதி என்று தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் நாட்டையும் சமூகத்தையும் தங்களது அரசியலுக்கு மேலாக கருத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒரு கட்சியையோ அல்லது ஒரு தனிநபரையோ எதிர்ப்பது, நாட்டின் எதிர்ப்பாக மாறக்கூடாது என்று அறிவுறுத்தினார். ஆனால் அரசின் வளர்ச்சி பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.