4 பெட்டிகள் மட்டும் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு.. அலறிய ரயில் பயணிகள்! சென்னையில் சம்பவம்….

173
Advertisement

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில் இன்று அதிகாலை சைதாப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்போது அந்த 4 பெட்டிகள் மட்டும் தனியே பிரிந்து சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1930 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில்கள் 4 பிரதான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது,

சென்னை சென்ட்ரல் – திருவொற்றியூர் – எண்ணூர் – பொன்னேரி – கும்மிடிப்பூண்டி – சூலூர்பேட்டை – நெல்லூர் இணைப்பு (176 கி.மீ.), சென்னை கடற்கரை – எழும்பூர் – மாம்பலம் – திரிசூலம் – தாம்பரம் – திருமால்பூர் – தக்கோலம் – அரக்கோணம் இணைப்பு. (122.71 கி.மீ.), சென்னை கடற்கரை – எழும்பூர் – மாம்பலம் – திரிசூலம் – தாம்பரம் – செங்கற்பட்டு – மேல்மருவத்தூர் – திண்டிவனம் – விழுப்புரம் இணைப்பு (163 கி.மீ.), சென்னை சென்ட்ரல் – அம்பத்தூர் – ஆவடி – திருவள்ளூர் – அரக்கோணம் – திருத்தணி – ரேணிகுண்டா – திருப்பதி இணைப்பு.

(151 கி.மீ.), சென்னை சென்ட்ரல் – அம்பத்தூர் – ஆவடி – திருவள்ளூர் – அரக்கோணம் – காட்பாடி – வேலூர் கண்டோன்மண்ட் – ஆரணி – திருவண்ணாமலை – திருக்கோவிலூர் – விழுப்புரம் இணைப்பு (290 கி.மீ.), சென்னை சென்ட்ரல் – அம்பத்தூர் – ஆவடி – திருவள்ளூர் – அரக்கோணம் – காட்பாடி – ஜோலார்பேட்டை இணைப்பு (213 கி.மீ.) என மொத்தம் 896 கி.மீ தொலைவுக்கு புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.