செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச விமான பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

190

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச விமான பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

செஸ் ஒலிமபியாட் போட்டியை மேலும் விளம்பரப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் சென்னையில் இருந்து பெங்களூவுக்கு சிறப்பு விமான சேவை இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இலவசமாக பயணம் மேற்கொள்ள உள்ளனர். மேலும் இந்த பயணத்தின் போது, மாணவர்கள் விமானத்திலேயே செஸ் போட்டி விளையாடியபடியே பயணிக்க உள்ளனர். இந்த விமான பணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் தொடங்கி வைக்க உள்ளார்.

இதனிடையே 44வது உலக செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றவுள்ள நிலையில், துவக்க விழாவிற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மெய்யநாதன், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.