சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய் 70 சதவிகிதம் உக்ரைனில் இருந்து தான் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
தற்பொழுது அங்கு போர் நடந்து வருவதால் சமையல் எண்ணெய் இறக்குமதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது
.சில்லரை விற்பனையில் ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் ரூ.130 லிருந்து ரூ.160 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் மலேசியா,
இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பாமாயில் எண்ணெய் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே சமையல் எண்ணெய்களின் விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் இல்லையென்றால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது எனவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவு தயாரிப்புக்கு எண்ணெய் தான் முக்கிய தேவை என்பதால் ஹோட்டல் உரிமையாளர்களும்,இல்லத்தரசிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர் .