வேலூர் அருகே,  மனநிலை பாதிக்கப்பட்ட 16 வயது பெண்ணின்  கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியது…

108
Advertisement

வேலூர் மாவட்டம்  கே வி குப்பம் அடுத்த காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவர்  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக பணியாற்றி வந்தனர்.

இவரது 2வது மகள்  மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்த பாபு 

இரண்டாவது மகளின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு,  அருகே இருந்த கழிவறையில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.