தாம்பரம் அருகே, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

175
Advertisement

சென்னை தாம்பரம், சிடிஓ காலனி பகுதியில் 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தங்கியிருந்து தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது வீட்டின் எதிரே குடும்பத்துடன் வசித்து வந்த ராமலிங்கம் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டை காலி செய்துவிட்டு, வீட்டை விற்பனை செய்யப் போவதாக கூறி, எதிர் வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் சாவியை கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

பின்னர் கடந்த சில நாட்களுக்கு பின்னர் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்த ராமலிங்கம், அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ராமலிங்கத்தை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.