கரூர் அருகே, போலீசாரை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

129
Advertisement

கரூர் மாவட்டம்,லாலாபேட்டை அருகே உள்ள மகாதானபுரத்தில் சம்பூர்ணம் என்ற பெண் மீது கடந்த மார்ச் மாதம் சமூக விரோதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

இது சம்பந்தமாக, காவல் நிலையத்தில் நடைபெற்ற இருதரப்பு பேச்சு வார்த்தையில் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ஆயினும், அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வில்லை என தெரிகிறது. இதனை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது. இதில் ஒன்றிய, மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.