ஈரோடு அருகே, சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை போக்சோவில் கைது செய்த போலீசார் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்…

123
Advertisement

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள  ஈஞ்சரமேடு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி.

இவரை கடந்த 27ம் தேதி அதே பகுதியை சேர்ந்த  வாசுதேவன், சிவக்குமார்,  மோகன் ஆகியோர் சிறுமியை  கடத்திச்சென்று, கொலை மிரட்டல் விடுத்து பாலியல் வன்கொடுமை செய்தாக கூறப்படுகிறது.இதனையடுத்து,  சிறுமி சோர்வடைந்த நிலையில் இருப்பது கண்டு  பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது, வாசுதேவன், சிவக்குமார், மோகன் ஆகியோர் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.  இதுக்குறித்து சிறுமியின் பெற்றோர்  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சிறுமியின் , உறவினரான  பச்சையப்பன் என்பவர் சிறுமியை மிரட்டி  பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார், பச்சையப்பன் மற்றும் வாசுதேவனை போக்சோவில் கைது செய்து, தலைமறைவான  சிவகுமார், மோகன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.