உக்ரைனுக்கு மேலும் ஆயிரத்து 500 போர் வாகனங்களை வழங்கியதாக நேட்டோ பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்…

207
Advertisement

நேட்டோ என்ற அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பில் உக்ரைன் 30வது உறுப்பினராக கடந்த ஆண்டு பிப்ரவரியில் இணைந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. இந்த போரில் உக்ரைனின் அப்பாவி பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில், உக்ரைனுக்கு மேலும் ஆயிரத்து 500 போர் வாகனங்களை வழங்கியதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கவச போர் வாகனங்கள், 230 பீரங்கிகள், வெடிமருந்துகள் உள்பட 98 சதவீதத்துக்கும் அதிகமான ஆயுத உதவிகளை நேட்டோ நாடுகள் வழங்கியுள்ளன என்றும்  9க்கும் மேற்பட்ட உக்ரைனிய படைப்பிரிவுகளுக்கு பல்வேறு போர் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.