இன்று வெளியாகும் பறை மியூசிக் ஆல்பம்

279
Advertisement

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ஆல்பம் பாடல்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆல்பம் சாங் ரசிகர்களை அதிகளவில் கவர்வதில் , பல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் ஆல்பம் சாங் உருவாக்கத்தில் இறங்கியுள்ளனர்

அதில் ஒன்றாக ஜடா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான குமரன் இயக்கி இருக்கும் பறை ஆல்பம் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த பறை வழக்கமான ஆல்பம் பாடல்களை தாண்டி, உண்மை கதையை மையமாக கொண்டு சமுதாயத்தில் பலரும் கவனித்த வாழ்வில் மறக்கமுடியாத ஒரு விஷயத்தை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் குமரன்.

பறை ஆல்பம் பாடலுக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த போஸ்டரை இயக்குனர் பா.இரஞ்சித் உள்ளிட்ட பலரும் ஓங்கி ஒலிக்கட்டும் என்று பதிவு செய்து வாழ்த்தியிருந்தார்கள். இந்த பறை ஆல்பம் பாடல் இன்று வெளியாக இருக்கிறது.