எம் எஸ் விஸ்வநாதனுக்கு நினைவிடம் அமைக்கிறது கேரள அரசு

411
Advertisement

முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர் என்று போற்றப்படுபவருமான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நினைவிடம் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாலக்காடு அருகே உள்ள அவரது பிறந்த ஊரான எலப்புள்ளி கிராமப் பகுதியில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நினைவிடம் கட்டப்படஇருக்கிறது.