மகளுடன் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சிபெற்ற தாய்

214
Advertisement

மனவலிமை இருந்தால் சாதிக்க வயது தேவையில்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர்.

கர்நாடகா மாநிலம் , முன்னூர் கிராமத்தில் வசித்துவருபவர் மம்தா.இவரின் கனவு “அங்கன்வாடி” பணியாளராக சேவை செய்யவேண்டம் என்பதே.ஆனால் சூழ்நிலை காரணமாக தன் படிப்பை 10 ஆம் வகுப்பு கூட முடிக்கமுடியாமல் நிறுத்தியுள்ளார்.

ஆண்டுகள் கடந்தோடியது,தன் கனவை பூர்த்தி செய்யவேண்டும் என்றால் அதற்கு,”அங்கன்வாடி” பணியாளராக அடிப்படை தகுதி 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார்.

அப்போது தான்,மகளிர் கல்லூரி ஒன்றின்  துணை வேந்தரின்  தொடர்பு  மம்தாவுக்கு கிடைத்தது. அவரை சந்தித்தபின், தனது கல்வியைத் தொடர முடிவு செய்தார்.கனவை நினைவாக கவனமாக  படித்துவந்த மம்தா,10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் தன் மகள் குஷி உடன் இந்த தேர்வை  எழுதினார்.

தன் மகளுடன் ஒரே நேரத்தில் 10 ஆம் வகுப்பு  தேர்வு எழுதிய மம்தா தேர்வில் வெற்றிபெற்று அசத்தியுள்ளனர்.இது குறித்து மம்தா கூறுகையில்,”பரீட்சைக்கு தயார்படுத்த கல்லூரி துணை முதல்வர்  எனக்கு உதவினார், தேர்வு முடியும் வரை நான் அவரின் வீட்டில் தங்கிருந்து படித்தேன்.கணிதம் எனக்கு மிகவும் பிடித்த பாடம்.ஆங்கிலம் கடினமாக இருந்தது.வீட்டில் நானும் என் மகளும் ஒன்றாக படித்தோம். என் மகள் ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய போது,நான் கன்னட மொழியில் எழுதினேன். எனது குடும்ப உறுப்பினர்களும் எனக்கு ஆதரவளித்தனர்” என்று கூறியுள்ளார்.

தாய் மற்றும் மகள் ஒரே நேரத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதால் குடும்பத்தினர் மகிழ்ச்சில் உள்ளனர்.இவரின் மனவலிமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.