மனிதனை விழுங்கிய முதலை ?

45
Advertisement

முதலை பூமியில் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அவை தண்ணீரில் இரையைப் பிடிப்பது மட்டுமல்லாமல், தண்ணீருக்கு வெளியேயும் மிகவும் ஆபத்தானவை என்பதை  நிரூபிக்கின்றன.

இதற்கிடையில் அனுபவம் இல்லாமல்  முதலையை  பிடிப்பது உயிருக்கே ஆபத்தாகிவிடும்.இந்நிலையில் , முதலை ஒருவரை விழுங்கியது போல, இருவர் அந்த  நபரை முதலையின் வாய்வழியாக வெளியே இழுப்பது போல இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், தோட்டத்தில் முதலை ஒன்றின் வால் பகுதியை ஒருவர் பிடித்தபடி இருக்கிறார்,மற்றொருவர் முதலையின் வாயை திறந்து உள்ளே இருக்கும் ஒரு நபரின் கையை பிடித்து இழுக்கிறார்.இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் அது உண்மையாக முதலை கிடையாது என தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் இணையவாசிகள்

Advertisement