ஒராங்குட்டான் குரங்கிடம் சேட்டை செய்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்

344
Advertisement

பொதுவாக, ஒராங்குட்டான்கள் மனிதர்களிடம் இயல்பாக பழகக்கூடியவை.அதேநேரம் ஒரு காட்டு விலங்குகளின் நடத்தை கணிக்க முடியாது என்பதையும்  கருத்தில்கொள்ள வேண்டும்.

ஒராங்குட்டான்கள் மிகவும் வலிமையான குரங்குகள், மனிதர்களை விட ஐந்து முதல் ஏழு மடங்கு வலிமையானதாக கருதப்படுகிறது.அவைகளால்  226 கிலோ வரை தூக்க முடியும், இது அவைகளின்  சொந்த உடல் எடையை காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.

இந்நிலையில் ரெட்டிட் வளைத்ததில் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் இல்லாமல் பகிரப்பட்ட இந்த வீடியோவில் , கூண்டில் ஒராங்குட்டான் குரங்கு ஒன்று அடைக்கப்பட்டுள்ளது.

கூண்டின் அருகே வரும் சிறுவன் ஒருவன், வேண்டும் என்றே தன் கைகளை அதன் முன் நீட்டிகாட்டி முடிந்தால் பிடி என்பது போல அசைவுகளை செய்கிறான்.பொறுமையாக இதை பார்த்துக்கொண்டு இருக்கும் அந்த குரங்கு, ஒரு கட்டத்தில் அந்த சிறுவனின் கைகளை பிடிக்க வர ,அவன் பின்னே நகர்கிறான்.

ஆனால் ,அவன் அணிந்திருக்கும் உடையை பிடித்துவிடுகிறது அந்த குரங்கு.பின் சட்டெனெ அந்த சிறுவனை பிடித்து இழுக்க வசமாக மாட்டிக்கொண்டான் சிறுவன்.ஒரு கட்டத்தில் அவனின் கால் ஒன்றை இறுக்கமாக பிடித்து கொள்கிறது.

அருகே மற்றொரு நண்பர் அந்த சிறுவனை விடுவிக்க முயற்சி செய்கிறார்.சில நிமிடங்களுக்கு பிறகு தான்  குரங்கின் பிடியில் இருந்து சிறுவனை விடுவிக்க முடிந்தது.இந்த வீடியோ விலங்குகளிடமிருந்து விலகி பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது.