சாலையில் சேற்றை அடித்த சென்ற நபரை பழிவாங்க போலீசுக்கு போன் செய்த நபர்

32
Advertisement

சாலையில் மழைக்காலங்களில் அல்லது கால்வாய் தண்ணீர் தேங்கி நிற்கும்போது நடந்து செல்பவர்கள் சற்று நிதானமாக அருகில் வாகனம் வரும்போது நின்று செல்லவேண்டும்.

இந்நிலையில், டெல்லியில் ஒருவர் சாலை ஓரம் சென்ற பொது,அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று அவர் மீது சேற்றை வாரி அடித்துவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

அதில் ஆத்திரமடைந்த அந்த நபர்,அந்த வாகன  ஓட்டியை பழிவாங்குவதாக எண்ணி காவல் அவசர உதவி எண்ணிற்கு அழைத்து,தன்னை அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கியை காட்டு மிரட்டிவிட்டு கடந்து சென்றார் என கூறியுள்ளார்.

Advertisement

இதையடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த அதிரடிப்படை தேடியதில்  அங்கு யாரையும் காணவில்லை.அழைப்புவிடுத்த நபரின் தொலைபேசியும் அணைத்துவைக்கப்பட்டு உள்ளது.இதனால் போன் செய்த நபரை  தேடிவந்த காவல்துறை, தற்போது அவரை கைது செய்துள்ளது.