பல்வேறு இடையூறுகளுக்கு பின் அணைத்து மாநிலத்திலும் பள்ளிகள் கல்லூரிகள் என கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,லக்னோவின் கோலாகஞ்ச் வட்டாரத்தில் உள்ள நூற்றாண்டு மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விடுமுறை முடிந்து திரும்பியபோது,அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், கிட்டத்தட்ட ஒரே இரவில் 140 வருடங்கள் பழமையான சென்டெனியல் மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி காணாமல் போனது.அவர்களின் வரலாற்றுப் பள்ளி மறைந்து, அதன் இடத்தில் ஒரு புதிய தனியார் பள்ளி இருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதுமட்டுமின்றி, பள்ளியின் பெயர்ப்பலகைகள்,மாற்றப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வளாகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏறக்குறைய 360 மாணவர்களை கேட் வெளியே சாலையில் அமரவைத்து ஆசிரியர்கள் பாடம் எடுத்தனர்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.