போரை நிறுத்த வேண்டுகோள்விடுத்த சிறுமி

401
Advertisement

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்து , சிறுமி ஒருவர் , அமைதி வேண்டும் என வேண்டுகோள் விடுத்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் , போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவவும் , போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட உலகம் முழுவதும் பிராத்தனை செய்யப்பட்டு வருகிறது.

உக்ரைனுக்கு உதவவும் பல நாடுகள் உதவ முன் வந்து உள்ளன ,இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் , பகிரப்பட்டுள்ள ஓர் வீடியோவில் சிறுமி ஒருவர் , “எனக்கு பூமியில் அமைதி வேண்டும். நாங்கள் சகோதர சகோதரிகள். ஸ்டாப் வார், ”என்று கூறுகிறார்,

“உக்ரைன் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவர்க்கும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்று தலைப்பிடப்பட்டுஉள்ள இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது .