பாலோடு பழம் சாப்பிட்டால் இவ்ளோ ஆபத்தா? அதிர்ச்சி தகவல்

165
Advertisement

‘பழம் நழுவி பாலில் விழுந்தாற் போல’ என்ற பழமொழியை ஒரு விஷயம் நினைத்ததை விட நன்றாக நடக்கும் போது கூறுவார்கள்.

ஆனால், உண்மையில் பாலுடன் சேரும் பெரும்பான்மை பழங்கள் உடலுக்கு நன்மையை விட எதிர்மறை விளைவுகளையே அதிகம் தருவதாக தெரியவந்துள்ளது.

பாலில் Lactic acid என்ற அமிலம் உள்ளது. அதே போல பழங்களில் பலவிதமான அமிலங்களும் புரதங்களும் உள்ளன. Tartaric, Fumaric மற்றும் Malic அமிலங்களை கொண்டது ஆப்பிள் பழம். செர்ரி, திராட்சை பழங்களில் malic மற்றும் tartaric அமிலங்கள் உள்ளன.

கொய்யா, எலுமிச்சை, ஆரஞ், பேரிக்காய், அன்னாசி பழங்களில் citric மற்றும் malic அமிலங்கள் உள்ளன. ஸ்ட்ராபெர்ரி மற்றும் புளியில் malic, tartaric மற்றும் citric அமிலங்கள் இருக்க தக்காளியில் oxalic அமிலம் உள்ளது. 

இந்த அமிலங்கள் lactic அமிலம் உள்ள பால், மோர் மற்றும் cheese உடன் சேரும் போது பலருக்கும் செரிமான சிக்கல்கள், குடல் சார்ந்த கோளாறுகள் மற்றும் சரும பிரச்சினைகள் ஏற்பட ஏதுவாக அமைகிறது.

இதனாலேயே பால் பழம், பால் புளி, பால் வினிகர், பழம்  வினிகர், பால் தக்காளி ஆகிய combinationகளை தவிர்க்குமாறு உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.