2000 ரூபாய் நோட்டு கிடக்கட்டும்.. இந்த நோட்டுகளை என்ன செய்வீங்க?

114
Advertisement

2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி நீக்கியதை அடுத்து தற்போது 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் குறித்த பெரிய தகவல் வெளியாகியுள்ளது.

மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிக்குச் சென்று 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2000 ரூபாயின் 10 நோட்டுகளை ஒரே நேரத்தில் மாற்றிக்கொள்ளலாம்.

இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பான செய்திகளுக்கு மத்தியில் தற்போது 100, 200, 500 நோட்டுகள் பற்றிய செய்திகள் பரவி வருகின்றன. இந்தியாவின் மிகப் பெரிய அரசு வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மக்களிடம் பழைய சிதைந்த நோட்டுகள் இருந்தால், அவற்றை எளிதாக மாற்றி வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்று கூறியுள்ளது.

பல சமயங்களில் நம்மிடம் உள்ள ரூபாய் நோட்டின் நிலை மிகவும் மோசமாகி விடுகிறது. அதன் காரணமாக யாரும் அதை வாங்கமாட்டார்கள். தற்போது சூழ்நிலையில் மக்கள் நிறைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்த சலுகை பழைய சிதைந்த நோட்டுகளை வைத்திருக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களுடைய ரூபாய் நோட்டு பழைய நோட்டாக இருந்தாலோ, அழுக்கடைந்து சிதைந்திருந்தாலோ, சில பாகங்கள் சிறிதாக கிழிந்திருந்தாலோ மாற்றிக்கொள்ளலாம். அதேநேரம், அது ரூபாய் நோட்டுதான் என்று தெரியாத அளவுக்கு மிக மோசமான சேதம் அடைந்தால் அதை மாற்றுவது கடினம். அதேபோல, நோட்டுகளின் தன்மைக்கு ஏற்ப அதன் மதிப்பு குறைவாக மாற்றித் தரப்படும்.