மோதிய வேகத்தில் காரின் பேனட்டில் சிக்கிய “சிறுத்தை”

44
Advertisement

நெடுஞ்சாலையில் சிறுத்தை ஒன்று  காரில்  மோதி  பேனட்டில்  சிக்கி வெளிவர போராடும்  மனதை கலங்கடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி  வருகிறது.

 ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா  பகிர்ந்த இந்த வீடியோவில், கார் ஒன்று  நெடுஞ்சாலையில்  சென்றபோது, சாலையை கடக்கமுயன்ற சிறுத்தை ஒன்று காரில் மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் காரின் முன் பேனட் பகுதி உடைந்து சிறுத்தியின் உடல் பாதி உள்ளே சொருகிவிட்டது.சிறுத்தை மோதியதை  உணர்த்த கார் ஓட்டுநர் உடனே காரை நிறுத்திவிட ,  சிக்கிக்கொண்ட காரிலிருந்து வெளியேற போராடுகிறது அந்த சிறுத்தை.

Advertisement

இதனை அருகில் இருந்த மற்றொரு கார் ஓட்டுநர் படம்பிடித்துள்ளார்.பார்ப்பதற்கே கொடுமையாக இருக்கும் இந்த  விபத்தை,காட்டுப்பகுதில் சாலை அமைப்பதின் விளைவு என  கடும் மனவருத்தத்துடன் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் இந்த அதிகாரி.