கைபுள்ளையை களம் இறக்கிய கூத்தாநல்லூர் நகராட்சி

278
Advertisement

வின்னர் படத்தில், கைபுள்ளையாக நடித்த வடிவேலுவின் ‘இந்தக் கோட்டை தாண்டி நீயும் வரக் கூடாது, நானும் வர மாட்டேன்’ என்ற வசனத்தை தமிழகம் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அது மட்டுமில்லாமல், அன்றாட வாழ்க்கையில் இன்றும் பெரும்பாலானோரின் பேச்சுவழக்கை வடிவேலுவின் வசனங்கள் தான் ஆக்கிரமித்து வருகிறது. இந்த சூழலை சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் நகராட்சி கையிலெடுத்து இருப்பது தான் சுவாரஸ்யமான புதுமை.

பொது இடங்களில் குப்பை கொட்ட கூடாது என்பதை வலியுறுத்த ‘இந்த இடத்துக்கு குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது! நானும் வர மாட்டேன்’ என்ற வாசகத்தை, வடிவேலுவின் கைப்புள்ள அவதாருடன் bannerஆக வைத்துள்ள கூத்தாநல்லூர் நகராட்சியின் முயற்சிக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.