கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் – 329 பேர் கைது

219

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் மேலநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே நேற்று திடீரென தனியார் பள்ளியில் குவிந்த போராட்டக்காரர்கள், வன்முறையில் ஈடுபட்டனர்.

போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள், போலீசாரின் வாகனம் உட்பட பள்ளி வாகனங்கள் அனைத்தையும் தீ வைத்து எரித்தனர்.

போராட்டக்காரரகள் கல் வீசி தாக்கியதில் கள்ளக்குறிச்சி எஸ்.பி., டி.ஐ.ஜி உட்பட 52 காவலர்கள் காயமடைந்தனர்.

இந்த கலவரம் தொடர்பாக இன்று காலை வரை 329 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைனர் தெரிவித்துள்ளனர்.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வன்முறையில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.