தமிழகத்தில், 876 ஊராட்சிகளில் இந்தாண்டு கிராம செயலகம் கட்டப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி அளித்த அமைச்சர் K.K.S.S.R. ராமச்சந்திரன், கிராமங்களில் விஏஓ அலுவலகங்கள் வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த வருவதாக தெரிவித்தார்.
இதனால், ஊராட்சி மற்றும் வருவாய்த்துறை இணைந்து, கிராம செயலகம் என்ற பெயரில், 876 இடங்களில் ஊராட்சி அலுவலகங்கள், கூட்ட அரங்கம், விஏஓ அலுவலகங்களை ஒரு இடத்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களை தேர்வு செய்து கட்டிடம் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.