அரபிக்குத்து பாடலை பாடிய பாடகி சினிமாவில் நடிக்கிறார்

596
Advertisement

ஏ.ஆர்.ரகுமான் ,அனிருத் ஹிட் பாடல்கள் என்றால் பாடகி ஜொனிதா காந்தியின் குரல் நிச்சயம் இருக்கும் . தமிழில் வெளிவந்த ‘காப்பான்’ ‘காற்று வெளியிடை’ ‘டாக்டர்’ ‘ உள்பட பல படங்களில் தனது இனிமையான குரலால் பல பாடல்களை பாடியுள்ளார். விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் ‘அரபி குத்து’ பாடலை பாடியிருக்கிறார். இந்த பாட்டு தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்படும் பாடலாக ‘டிரெண்டிங்’கில் உள்ளது. . பார்ப்பதற்கு இளமையாய் இருப்பதாலும் ,நுணுக்கமான முக பாவங்களாலும் படத்தில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தபோதும் அவர் பாடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

இந்தநிலையில் ஜொனிதா காந்தி ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் டைரக்டு செய்கிறார். ஜொனிதா காந்திக்கு ஜோடியாக கிருஷ்ணகுமார் நடிக்கிறார்.

காதலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கூட்டாக தயாரிக்கிறார்கள்.